பொதுவாக நம்முடைய வீட்டில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை என்பது இருக்கும். கொசு மற்றும் ஈக்கள் போன்றவற்றை விரட்டுவதற்கு லிக்விட் போன்றவற்றை பயன்படுத்தினால் சருமத்திற்கு அலர்ஜி போட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில் வீட்டில் உள்ள கொசுக்கள் மற்றும் ஈக்கள் போன்றவற்றை விரட்டுவதற்கு இயற்கையாக சில வழிமுறைகளை பயன்படுத்தலாம். அது பற்றி தற்போது பார்ப்போம்.

1. பூண்டு- 6 முதல் 8 பூண்டு பற்களை எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் வைத்து பூண்டை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு நன்றாக கொதித்த பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிட்டு அதை ஆற வைக்க வேண்டும். பின் அதை ஒரு பாட்டிலில் ஊற்றி விட்டு முழுவதும் வீடு முழுதும் ஸ்பிரே செய்தால் செய்தால் கொசு மற்றும் ஈக்கள் போன்றவைகள் அண்டாது.

2. கற்பூரம்- வீட்டில் காலியாக இருக்கும் கொசு லிக்விட் பாட்டிலை எடுத்துக்கொண்டு அந்த பாட்டிலில் வேப்ப எண்ணையை நிரப்ப வேண்டும். அதன் பிறகு அதில் சிறிது கற்பூரத்தை தூளாக்கி போட வேண்டும். இதை நன்கு கலந்து ரீபில் பாட்டிலில் ஊற்றி மெஷினில் மாட்டி விடலாம். இது இயற்கையானது என்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது.

3. துளசி-துளசிச் செடியில் பொதுவாகவே மருத்துவ குணங்கள் அதிகம். நாம் வீட்டு வாசலில் துளசி செடியை ஒரு தொட்டியில் வைத்து வளர்த்தால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை சற்று ஓய்ந்துவிடும்.

4. லெமன் கிராஸ் ஆயில்-சூடான தண்ணீரில் லெமன் கிராஸ் ஆயிலை சேர்த்து சிறிது ஆற வைக்க வேண்டும். அது லேசாக ஆறிய பிறகு வீட்டின் ஜன்னல் மற்றும் கதவு போன்ற இடங்களில் தெளித்து விட வேண்டும். இதேபோன்று கொசுக்கள் மற்றும் ஈக்கள் அதிகமாக வரும் இடங்களிலும் தெளிக்க வேண்டும். மேலும் இப்படி செய்வதன் மூலம் கொசுக்கள் மற்றும் ஈக்கள் தொல்லை குறையும்.