தற்போது அதிகரித்து வரும் H3N2 தொற்று எண்ணிக்கை அரசாங்கத்திற்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார நிபுணர்கள் தொடர் எச்சரிகை விடுத்து வருகின்றனர். அதோடு மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியமான உத்தரவுகளை வழங்கி உள்ளது.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது, அனைத்து ஆய்வகங்களிலும் செய்யப்படும் மாதிரிகளின் பகுப்பாய்வில் இன்ஃப்ளூயன்ஸா A அதிகமாக இருப்பதை கண்டறிவது குறிப்பாக கவலைக்குரியது ஆகும். முதியவர்கள், சிறுகுழந்தைகள் மற்றும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக ஆபத்தில் இருக்கின்றனர் எனவும் அவர் கூறினார். இந்நபர்கள் HIN1, H3N2, அடினோ வைரஸ் ஆகியவற்றால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.