வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) சமூக நல அலுவலர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அதே நேரம் சமூக நல ஆர்வளர் ஆக இளங்கலை பட்டப்படிப்பு அவசியம். இந்த பணிகளுக்கு ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 2859 பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://recruitment.nta.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.