ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவர் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் நாட்டின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாக ANI- இன் ட்விட்டர் பக்கம் அதிரடியாக முடக்கப்பட்டது. 76 லட்சம் பின் தொடர்வோரைக் கொண்டுள்ள இந்த பக்கம் முடக்கப்பட்டதற்கு வயது பற்றாக்குறையை காரணம் என்று உள்ளது ட்விட்டர் நிறுவனம். அதாவது 13 வயது இருந்தால்தான் ட்விட்டர் கணக்கு தொடங்க முடியும் என்று கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க இந்த செட்டிங்கை நிறுவனம் சார்பில் அப்டேட் செய்த நிலையில் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.