தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே குரங்கு ஒன்று வித்தியாசமான பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு ஒன்று பஞ்சாபில் இருந்து பாகிஸ்தானின் பகபல்பூர் நகரத்திற்கு சென்ற நிலையில் அதனை பாதுகாக்கவா அல்லது வனவிலங்கு கண்காட்சியில் சேர்க்கவோ எந்தவித நடவடிக்கையும் செய்ய மாட்டோம் என பாகிஸ்தானின் ஒரு மீட்பு பிரிவு தெரிவித்துள்ளது.

200 அடி செல்லுலார் டவரில் சிக்கிக்கொண்ட இந்திய டவரை பல மணி நேரங்களுக்கு போராடிய பின் பாகிஸ்தானின் அவசர கால சேவை மீட்பு 1122 என்னும் பிரிவு மீட்டெடுத்தது. எனவே அதிகாரிகள் அதனை மீண்டும் காட்டுப்பகுதியில் விடாமல் உள்ளூர் மிருக காட்சிகளில் சேர்க்க தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. குரங்கை சேர்க்க உயிரில் பூங்காவில் இடம் இல்லை எனக் கூறி கை விரித்து விட்டது.

இது குறித்து பேசிய மாவட்ட வனவிலங்கு அலுவலர் பகவல்பூர் உயிரியல் பூங்காவில் கூடுதல் விலங்குகளை சேர்க்க போதிய இடமோ பணியாளர்களோ இல்லை. மேலும் பாகிஸ்தானில் நுழையும் பெரும்பாலான இந்திய விலங்குகள் காயத்தால் இறக்கின்றன. எனவே அதற்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை என்று முன்னதாக கால்நடை மருத்துவர் இல்லாததால் இந்திய லங்கூர் குரங்கு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததாக கூறினார். இருப்பினும் வனவிலங்குகளின் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவர் இங்கு வேலைக்கு கொண்டுவரப்படவில்லை. இதுபோல சம்பவங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது