செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணிக்குள் சண்டை என்பது நேச்சுரலா இருக்கிறதுதான். இந்த கூட்டணிய பொறுத்த வரை ஒரு ஒரு கட்சியுமே வேற வேற ஐடியாலஜில இருக்கிற கட்சி. சித்தாந்தத்தின் அடிப்படையில் பார்த்தால் எல்லா கட்சிகளும் வேறு, வேறு. இது ஒரே கட்சி கிடையாது. எல்லாம் வேறு வேறு. நேச்சுரலா இந்த முட்டல் மோதல் வருவது சகஜம் தான்.  பெரிய விஷயம் கிடையாது. ஏன்னா ஐடியாலஜிக்கலி வேற.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972இல் உருவான சரித்திரம் வேற. பாரதிய ஜன சங்கம் 1950 காலகட்டத்தில் உருவான கருத்து வேறு. அதன் பிறகு 1980 பாரதிய ஜனதா கட்சியாக மாறிய சரித்திரம் வேற. அடிப்படையில் பாத்தீங்கன்னா….  ஐடியாலஜிக்கா  எல்லாமே வேறுபட்ட கட்சி. அப்படி இருக்கும்போது எல்லா பிரச்சனைகளும், எல்லா விஷயங்களும்…  இரண்டு கட்சியும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

அதனால நேச்சுரலா இது வர தான் செய்யும், இது புதுசு கிடையாது. எல்லா ஊரிலையும்,  எல்லா கூட்டணி கட்சிளையும்,  எல்லா இடத்திலையுமே இதுபோல கூட்டணி கட்சிகள் இருக்கும் போது பொதுவான விஷயம் தான் இணைக்கும். பொதுவான விஷயம் நரேந்திர மோடி அவர்கள்… ஒரு ஒருமைப்பாடான நாடு…. வலிமையான ஒரு தலைவர் அப்படின்னு அதிமுக நினைக்கிறாங்க….

இந்திய அளவில் நரேந்திர மோடி அவர்கள் வேண்டும்….  அதே நேரத்துல தமிழகத்துல பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை மாநில தலைவராக நான் ஒரு இலக்கு வச்சிருக்கேன். இந்த கட்சி இப்போ ஆட்சிக்கு வரணும். இந்த கட்சி இப்படி வளரணும். இந்த கட்சி அக்ரசிவா இருக்கணும். இந்த கட்சி தமிழகத்திற்காக அரசியல் பண்ணனும்.

தமிழகத்தினுடைய ஒரு பிராந்திய கட்சி மாதிரி தேசியக் கட்சி செயல்படனும். இது மாநில தலைவராக வந்த பிறகு நான் கொண்டு வந்திருப்பது. எனக்கு முன்னாடி இருந்த தலைவர்களும் அதை பண்ணாங்க. அப்படி இருக்கும்போது நேச்சுரலா சில முட்டல்,  மோதல்கள், சில கருத்து வேறுபாடுகள், சில இடத்தில பேச்சுக்கள், வருவது இயல்பு தான்,  சகஜம் தான். அதை பர்சனலாக எடுத்துக்க வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவித்தார்.