தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி மல்லிடி. இவர் டோலிவுட்டில் பெரிய அளவில் பாலியல் சுரண்டல்கள் நடப்பதாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் திரைப்பட கலைஞர்கள் சங்கம் ஸ்ரீரெட்டின் அந்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது.

இதன் மூலம் தெலுங்கு திரை உலகையே புரட்டி போட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி. தற்போது போதை பொருட்கள் பயன்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “சினிமா துறையில் பாலியல் சுரண்டல்கள் நடப்பதாக நான் போராடிய போது எனக்கு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை. அப்போது சில நடிகைகள் கூட என்னை விமர்சித்தார்கள்.

ஆனால் தற்போது போதைப்பொருள் வழக்கத்தில் நடிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனக்குக் கூட உதட்டில் வலுக்கட்டாயமாக கொக்கையினை தடவி விட்டு உள்ளார்கள்.

இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் பெரிய இடம் என்பதால் பெரும் அளவில் எனக்கு அவர்களைப் பற்றி தெரியாது. நடிகைகள் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாவதற்கு மிக முக்கிய காரணம் சருமம் மிளிர வேண்டும் என்பதற்காகவும், மன அழுத்தம், பசி, சோர்வு போன்றவை ஏற்படக்கூடாது என்பதற்காகவும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஆனால் நான் அப்படி இல்லை எப்போது கூப்பிட்டாலும் ரத்தப் பரிசோதனைக்கு தயாராக உள்ளேன். இந்த சினிமா திரையுலகில் உண்மைக்காக போராடினேன்.

ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை நானே குற்றவாளியாக மாறினேன். எனக்கு துரோகம் செய்தவர்கள் அநியாயம் செய்தவர்களை கர்மா இப்போது தண்டனை கொடுத்து வருகிறது. இன்னும் சிலருக்கு இது போன்று நடக்கும் அதையும் நான் கண்கூடாக பார்ப்பேன் என கூறினார்.