தமிழ் நடிகர் கமலஹாசன் தக்கலைப் பட விழாவில் கன்னட மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனை அடுத்து கர்நாடகாவில் கமலஹாசனுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும் தக்கலைப் படத்தை திரையிடவும் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டது. பல்வேறு மிரட்டல்களும் வந்தன. மேலும் கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்பினர் பலரும் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இச்சூழலில் பெங்களூரு நீதிமன்றத்தில் கன்னட சாகித்திய பரிசத் அமைப்பு நடிகர் கமலஹாசன் மீது வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்னட மொழி குறித்தோ, கலாச்சாரம், நிலம், இலக்கியம் குறித்தோ எந்தவித கருத்தும் தெரிவிக்க நடிகர் கமலஹாசனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.