மழைக்காலம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சில நேரங்களில் அது ஆபத்தானதாகவும் மாறிவிடுகிறது, குறிப்பாக மலைப்பகுதிகள் அல்லது சாய்வான சாலைகளில் பயணிக்கும் போது சிறு தவறு நடந்தாலும் நொடிப்பொழுதில் நிலைமை மோசமாகிவிடும்.

மேலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், சாய்வான ஒரு சாலையில் கார் ஒன்று திடீரென பின்னோக்கி வேகமாக நகரத் தொடங்குகிறது. அந்த ஆபத்தான சூழலில், அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் நொடிப்பொழுதில் தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி, ஒரு பெரிய கல்லை ஓடிச் சென்று எடுத்து வந்து காரின் சக்கரத்திற்கு அடியில் வைக்கிறான்.

“>

இதனால் சிறுவனின் இந்த துரிதமான மற்றும் சமயோசிதமான செயலால், வேகமாகப் பின்னோக்கிச் சென்ற அந்த கார் உடனடியாக அங்கேயே நின்று, ஒரு மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்படுகிறது. காரை ஓட்டி வந்த ஓட்டுநருக்குக் கூட அந்த பதற்றமான சூழ்நிலையில் என்ன செய்வதென்று சட்டென்று தோன்றாத நிலையில், ஒரு சிறு குழந்தையாக இருந்தாலும் பதற்றமடையாமல் வினாடிகளில் முடிவெடுத்து இந்த அசம்பாவிதத்தைத் தடுத்ததன் மூலம் அச்சிறுவன் இணையவாசிகளின் மனதை வென்று, அனைவராலும் ஒரு ‘உண்மையான ஹீரோ’ என்று பாராட்டப்பட்டு வருகிறான்.