நடிகர் சூரி குறித்து சமீபத்திய பிரஸ் மீட் ஒன்றில் பேசிய கருத்துக்கள் வைரலான நிலையில், அதுகுறித்து நடிகர் கொட்டாச்சி தற்போது உருக்கமான விளக்கம் அளித்து, சூரியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தங்களுக்குள் எந்தவிதமான மனஸ்தாபமோ, நட்பு ரீதியான விரிசலோ இல்லை என்றும், சூரியின் இன்றைய வளர்ச்சிக்கு அவரது கடின உழைப்பும் திறமையும் மட்டுமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“என்றுமே எனக்கு சூரி நண்பன்தான்..
உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்..தயவுசெய்து மன்னித்துவிடு”- நடிகர் கொட்டாச்சி#Soori | #Kottachi | #ActorSoori pic.twitter.com/tYAHeOOAK8
— PttvOnlinenews (@PttvNewsX) May 17, 2026
அன்றைய பிரஸ் மீட்டில், ஆரம்பகால வேதனைகள் குறித்துப் பேசும்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியால், உணர்ச்சிவசப்பட்டு “சூரி தனக்கு சினிமா ரீதியாக உதவவில்லை” என்ற ஆதங்கத்தை டக்குனு கொட்டிவிட்டதாகக் கூறியுள்ளார். “சூரி எத்தனையோ குழந்தைகளுக்குப் பள்ளி கட்டணம் செலுத்தி ரகசியமாக உதவி வருவதை அறிந்து பெருமைப்படுகிறேன், தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடு நண்பா” என கொட்டாச்சி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
