திருமண விழாக்களில் வித்தியாசமான ‘வைரல் ஐடியாக்களை’ப் பின்பற்றும்போது பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், ஒரு திருமண விழாவில் நடந்த விபத்து குறித்து மணமக்கள் தாங்களே வீடியோ வெளியிட்டுள்ளனர்.
திருமண என்ட்ரிக்காகப் பயன்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் பலூன்கள் மீது, எதிர்பாராதவிதமாக கலர் கன் ஒன்றின் வெப்பம் பாய்ந்ததால், பலூன்கள் வெடித்துச் சிதறியதில் மணமகளான தன்யாவின் முகம் மற்றும் முதுகுப் பகுதியிலும், மணமகன் குஷாக்ராவின் விரல்கள் மற்றும் முதுகிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. “மிகச் சிறப்பு வாய்ந்த நாள் இப்படி மாறும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
ட்ரெண்டுகளுக்காகப் பாதுகாப்பை ஒருபோதும் தியாகம் செய்யாதீர்கள்” என்று மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்குடன் இந்தத் துயரச் சம்பவத்தை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
