பெங்களூருவில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரோ நிலையம் அருகே உள்ள பாலத்தில், ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவுடன் சிறிய விபத்தில் சிக்கியதால், அப்பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பெரும் குழப்பம் நிலவியது.
தவறான பக்கத்தில் (Wrong Side) ஸ்கூட்டரை ஓட்டி வந்த அந்தப் பெண், எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த உடனேயே, அந்தப் பெண் கூச்சலிட்டுப் பிரச்சினையை அதிகப்படுத்தத் தொடங்கினார்.
இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து காவலர் தலையிட்டும், ஆத்திரமடைந்த அந்தப் பெண் காவலரின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்ததால், நெரிசல் மேலும் அதிகரித்தது. “தவறு செய்தும் கத்துகிறார், மன்னிப்புக் கேட்க மறுக்கிறார்” என்று இணையவாசிகள் அவரது ‘அநாகரிகமான’ நடத்தையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
1 km jam, hundreds delayed
all thanks to one person who refused to admit a simple mistakeWhat is your opinion on this? Whose mistake it is?
A Woman drives the wrong-way on road, causing an accident with an auto-rickshaw. But the worst part? She had the audacity to scream,… pic.twitter.com/iaTJLmzOXM
— Karnataka Portfolio (@karnatakaportf) November 14, 2025
“>
மேலும், தவறான திசையில் வாகனம் ஓட்டியதற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும் அவருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
