இந்திய அணி அபார வெற்றி பெற்றதில் குல்தீப் யாதவ் மற்றும் திலக் வர்மா முக்கிய பங்காற்றினர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கில் திலக் வர்மா அரைசதம் அடித்து அணியை வலுப்படுத்தினார். இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணிக்கு அற்புதமான வெற்றியைப் பெற்றுத் தந்தது.
இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சஞ்சு சாம்சனும் திலக் வர்மாவும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு அரைசத கூட்டணி அமைத்தனர். ஆனால், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, சஞ்சுவை ஆட்டமிழக்கச் செய்தார். அப்ரார் வீசிய பந்தை பெரிய ஷாட் அடிக்க முயன்ற சஞ்சு, பந்து பேட்டின் விளிம்பில் பட்டு காற்றில் எழ, பாகிஸ்தான் வீரர் அதை தவறவிடாமல் பிடித்தார்.
சஞ்சு ஆட்டமிழந்ததால் இந்திய அணியில் ஏமாற்றம் நிலவியது. அப்போது அப்ரார் அகமது, “வெளியே போ” என்பது போல் கழுத்தை வளைத்து சைகை செய்தார். இதேபோல், முன்பு சாம்பியன்ஸ் ட்ராஃபியில் கில் ஆட்டமிழந்தபோதும் அவர் இப்படி சைகை செய்திருந்தார். ஆட்டம் முடிந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
INDIAN PLAYERS DOING ABRAR CELEBRATION…!!! 😂🔥pic.twitter.com/3trZCTzGmr
— Johns. (@CricCrazyJohns) September 28, 2025
மூன்று இந்திய வீரர்கள், அப்ராரைப் பார்த்து “வெளியே போ” என்பது போல் கழுத்தை வளைத்து சைகை செய்து, “எங்களை சீண்டினால் இப்படித்தான் இருக்கும்” என்று எச்சரித்தனர். இந்தக் காட்சியை சஞ்சு சாம்சன் அருகில் இருந்து பார்த்து, “எங்கள் ஆட்களுடன் மோதினால் சும்மா இருக்க மாட்டோம்” என்று பாவனை செய்து சிரித்தார்.
