பிரபல நடிகரான விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தான் விஜயின் கடைசி திரைப்படமா என கேள்வி எழுந்தது. இந்த படத்தில் நடிகை மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கேரளா நிகழ்ச்சியில் பங்கேற்ற மமிதாவிடம், “இது விஜய்யின் கடைசி படம் தானா?” என கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலளித்த மமிதா, “ஜனநாயகன் படப்பிடிப்பு போது விஜய் சாரிடம், ‘இது உங்களுடைய கடைசி படம் தானா?’ என்று நான் நேரடியாக கேட்டேன். அதற்கு அவர், ‘தெரியவில்லை… தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தான் பார்க்கலாம்’ என பதிலளித்தார்” என்று தெரிவித்தார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மமிதா கூறுகையில், “ஜனநாயகன் படப்பிடிப்பு மிக உணர்வுபூர்வமானதாக இருந்தது. விஜய் சார் உள்பட அனைவரும் மிகவும் உணர்ச்சிவசப்படும்படி அந்த சூழ்நிலை இருந்தது” என்றார்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டே தனது அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் (TVK)-ஐ தொடங்கி முழு நேர அரசியலில் இறங்க திட்டமிட்டார். ஆனால், இந்தப் பட ஒப்பந்தம் அரசியல் ஆரம்பிக்கும் முன்பே ஏற்பட்டதாலேயே இதை முடித்து அரசியலில் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தார். எனவே, இந்த படம் முடிவடைந்த பின், விஜய் அரசியல் பயணத்தில் முழுமையாக ஈடுபட வாய்ப்பு இருப்பது போல தகவல்கள் வலுத்துள்ளன.