
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் சந்தானம். இவர் ஆர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடைய காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆர்யா தயாரிப்பில் வெளியாகவுள்ள “டிடி நெக்ஸ்ட் லெவல்” என்ற திரைப்படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சந்தானம் நகைச்சுவையான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது சென்னையில் ஒரு இடத்தில் சந்தானம் வீடு ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார். அந்த வீடு கொஞ்சம் பழைய வீடு போல இருந்ததால் அதனை புதுப்பித்து விட்டு குடியேறலாம் என்று எண்ணி அதற்கான வேலையை தொடங்கினார். அந்த சமயத்தில் சந்தானம் வாங்கிய வீட்டை பார்த்து ஆர்யா இந்த வீடு நல்லாவே இல்லை என்று கூறி ஆள் வர வைத்து வீட்டை இடித்து விட்டார். அதோடு வீடு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
அதன் பின் வீட்டிற்கு விளக்கேற்ற சென்ற சந்தானத்தின் அம்மா வீட்டை தேடி அலைந்தார். உடனடியாக சந்தானத்திற்கு போன் செய்து வீட்டை காணும் என்று கூறினார். அப்போது சந்தானம் நடந்ததை கூறியதால் அவருடைய அம்மா படத்துல தானடா இப்படி பண்ணுவீங்க நிஜ வாழ்க்கையிலும் இப்படியாடா பண்ணுவீங்க என்று திட்டி தீர்த்துள்ளார். இந்த சம்பவத்தை சந்தானம் பகிர்ந்த போது அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.