இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி வளர வளர பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் டிஜிட்டல் உலகில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க பலவிதமாக அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் இது போல செய்யும் சிறிய தவறினால் பிரபலகங்கள் முதல் சாதாரண பெண்கள் வரை அவர்களுடைய அந்தரங்க வீடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் ஒருசில அந்தரங்க ஆசாமிகளால் லீக் செய்யப்பட்டு விடுகிறது. அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பிரபலமான நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ தான் என்று கூறி சமூக வலைதளத்தில் ஒரு ஆபாச வீடியோ வைரலாகி வந்தது.
இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டா ஸ்டோரியில் வீடியோ ஒன்றை வைத்துள்ளார். அதில் ஒரு பெண் தன்னுடைய மற்றொரு version-ஐ AI மூலமாக உருவாக்குவது எப்படி என்பதை விளக்குகிறார். இதன் மூலமாக அவருடைய அந்த ஆபாச வீடியோ முழுக்க முழுக்க AI மூலம் சித்தரிக்கப்பட்டது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
