
சமீப காலமாக பிரபலங்கள் விவாகரத்து செய்வது என்பது அதிகரித்து வருகிறது. அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்த நிலையில், ஜிவி, பிரகாஷ் சைந்தவி விவாகரத்து குறித்து அறிவித்தனர். இதேபோன்று பல பிரபலங்கள் விவாகரத்து குறித்து அறிவித்து வரும் நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா 35 வருடங்களாக தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து நிலையில் அவரை விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை சம்யுக்தாவும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.

இவர் கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு மகன் இருக்கிறார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் இவர் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது