நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்யாணி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது ஆதி சப்தம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் இந்த வாரம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவருமே விவகாரத்து செய்ய போகிறார்கள் என்று இணையத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. இதற்கு ஆதி விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது நிக்கி கல்ராணியுடன் என்னுடைய திருமண வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. சில youtube சேனல்கள் எங்களுக்கு விவகாரத்தாக போவதாக வீடியோ  வெளியிடுவதை பார்ப்பது எனக்கு வலியை கொடுக்கிறது. சில youtube சேனல்கள் பணத்திற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள்” என்று கோபமாக பேசி இருக்கிறார்.