
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருப்பினும் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதோடு மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து செயல்படுகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது வயநாடு நிலச்சரிவு சம்பவத்திற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கேரளா வயநாடு நிலச்சரிவின் செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். என்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரம் அடைந்த குடும்பத்தினருடன் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.