தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் அமிதாபச்சன், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கல்கி படத்தின் புஜ்ஜி டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மே 22ஆம் தேதி வெளியாகும் பிரம்மாண்ட புஜ்ஜியின் அறிமுகம் குறித்த வீடியோ மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.