தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடந்த 2013 ஆம் வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தான் அவருடைய கேரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த படத்தை இயக்கிய பொன் ராமன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2016ம் வருடம் உருவாகிய ரஜினி முருகன் படமும் வெற்றி படமாக அமைந்தது.

கடைசியாக இவருடைய நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி அன்று அமரன் திரைப்படம் வெளியாகி 350 கோடி வசூல் சாதனை படைத்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இது சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிகமாக வசூலித்த படமாகும். தற்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின் ரஜினி முருகன் திரைப்படம் மார்ச் மாதம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக அப்பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.