சினிமா பிரபலங்கள் காதலிப்பதும், பலர் திருமணம் செய்து கொள்வதும், அதன் பிறகு பிரிவதும் வழக்கமான ஒன்றாக தான் திரையுலகில் இருக்கிறது. நாமும் அன்றாடம் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை செய்திகளாக படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில்  காதல் ஜோடியாக வளம் வந்தவர்கள் தான் சிம்பு மற்றும் நயன்தாரா ஜோடி. இவர்கள் வல்லவன் படத்தில் நடித்த போது தீவிரமாக காதலிக்க தொடங்கினார்கள். பின்பு சில பல காரணங்களால் பிரிந்தார்கள். இவர்கள் பிரிவுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு “இது நம்ம ஆளு” என்ற திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து மீண்டும் நடித்தார்கள்.

தற்போது இவர்கள் இருவரும் ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைகிறார்கள் என்று கூறப்படுகிறது. அது எப்படி சாத்தியம் என்றால் ? அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் திரைப்படம் தயாராகி வருகிறது.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த  படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிம்பு மற்றும் நயன்தாரா கலந்து கொள்கிறார்களாம் அதாவது இவர்கள் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரே டைமில் வரப்போகிறார்கள்