இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் சுமார் 600 புது ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. ப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெற தவறியதால் அந்நிறுவனம் சுமார் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனம் பணியாளர்களின் திறமையை சோதிக்க இத்தேர்வை நடத்தியது. அதில் தோல்வி அடைந்த சுமார் 400 பேரை இப்போது பணியிலிருந்து நீக்கி உள்ளது.

இதற்கு முன்பு 208 புதியவர்கள் FA தேர்வில் தோல்வியடைந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதன்படி மொத்தமாக 600 புதிய ஊழியர்களை இந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஊழியர்கள் ஆகஸ்ட் 2022ல் போர்டில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தோல்வியடைந்தாலும், ஜூலை 2022-க்கு முன்பு சேர்ந்த புதியவர்கள் பணிநீக்கம் செய்யப்படவில்லை என பணிநீக்கம் செய்தவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.