தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த தொழில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு தமிழ்நாடு கிராம வங்கி மூலமாக பல்வேறு களங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் குறைந்த பட்டியில் வீட்டு கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட கடன்களும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாமில் வீட்டுக் கடன், புதிய மற்றும் பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க, வீடு புதுப்பிக்க, விரிவாக்கம், வீட்டுமனை வாங்கி வீடு கட்ட மற்றும் பிற வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள வீட்டுக் கடனை மாற்றுவதற்கான கடன் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய அந்தந்த பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.