காசாவில் ஹமாஸ் அமைப்புகளின் இடங்களை குறிவைத்து ஏழு நாட்களாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா நகரில் 50 ஆயிரம் கர்ப்பிணிகள் உணவு குடிநீர் சுகாதாரமின்றி தவிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் காசா நகரில் மக்கள் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் காரணமாக காசாவில் இதுவரை 1400 பேர் உயிரிழந்துள்ளனர். காசா நகரில் நிவாரண பணிகளை மேற்கொள்ள 2400 கோடிக்கும் மேல் தேவைப்படுகிறது. காசா நகரில் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் வெளியேற விட்டால் நிலைமை மிக மோசமாகும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

காசாவில் 3600 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்:

காசாவில் 3600 க்கும் மேற்பட்ட இலக்குகளில் வான்வழி தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. காசாவில் 4000 டன் எடையுள்ள 6000 குண்டுகள் இதுவரை வீசப்பட்டுள்ளன எனவும் இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.