நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகள் சார்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய் வலியுறுத்தியும் கையெழுத்து இயக்கம் நடத்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த கையெழுத்து இயக்கத்தில் கட்சியினர்,  மற்றும் பொதுமக்கள் என அனைவரிடமும் கையெழுத்து  வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும், இந்த விகாரத்தை நீதிமன்றமே மனுதாரர் என்ற முறையில் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் வழக்கறிஞர் ML ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த முறையீட்டை அவசர வைக்க விசாரிக்கவும் அவர் கோரி இருந்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி பரத சக்கரவர்த்தி மற்றும் லட்சுமி நாராயணன், தற்போதைய நிலையில் இன்று அவசர வழக்காக விசாரிக்க முடியாது. திங்கட்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் முறையிட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறார்.