தெலுங்கு சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, கடந்த 2015-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகிப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த 5 திரைப்படங்களில் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ (2021) தவிர்த்து, ‘அகில்’, ‘ஹலோ’, ‘மிஸ்டர் மஜுனு’, ‘ஏஜென்ட்’ ஆகிய 4 படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன.
இத்தகைய தொடர் தோல்விகளால் அவரது திரை வாழ்க்கையே கேள்விக்குறியான சூழலில், ஜூலை 10 அன்று வெளியான அவரது 6-ஆவது திரைப்படமான ‘லெனின்’ பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து தற்பொழுது பிளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்துள்ளது.
View this post on Instagram
இந்த அசாத்திய வெற்றியைக் கொண்டாடும் வகையில், நடிகர் அகில் தனது தந்தை நாகார்ஜுனாவை நேரில் சந்தித்துக் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது தனது நீண்ட காலப் போராட்டத்திற்குப் பலன் கிடைத்த உணர்ச்சியில், தந்தை நாகார்ஜுனாவின் காலில் விழுந்து அகில் கதறி அழத் தொடங்கினார்.
மகனின் கண்ணீரைக் கண்ட நாகார்ஜுனாவும் அவரை வாரி அணைத்துக் கொண்டு எமோஷனலாக அழுத இந்த நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.
