தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடையழகி ரம்பா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இவர் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆனார். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நடிகை ரம்பா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக கதை கேட்டு வருவதாகவும் கூட ரம்பா சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது விவாகரத்து செய்யும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நடிகை ரம்பாவும் அவருடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நடிகை ரம்பா மற்றும் அவருடைய கணவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் நடிகை ரம்பா தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு என்பது இயல்புதான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.