செய்தியாளரிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எங்கள் கட்சி சார்பாக ஏற்கனவே ஒரு நிலைப்பாடு எடுத்திருக்கின்றோம். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் நாங்கள் பயணிக்க வேண்டும்.  அதற்காக தான் உறுதியாக செயல்பட வேண்டும் என்கின்ற முடிவை எடுத்து உள்ளோம். அண்மையில் நடந்த மண்டல அமைப்புச் செயலாளர் மீட்டிங்கில் கூட இந்த தேர்தலில் நாம் என்ன ஒரு நிலைப்பாடு எடுக்கணும்னு எடுக்கிறது நல்லது என என்னுடைய இயக்கத்தின் சகோதரர்கள் சொன்னதன் அடிப்படையில் இது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

டிசம்பர் 9ஆம் தேதி நெல்லையில் அதற்கான ஒரு நல்ல முடிவை அறிவிப்போம். தேர்தல் சூடு பிடிப்பதற்கு இன்னும் ஒரு மாசம், ஒன்றரை மாசம் ஆகலாம்.  அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியும் ? அப்ப பாக்கலாம்.  அழைப்பு வருவது பற்றி யேசனை பண்ணலாம். அழைப்பு வருது,  வரலன்னு நாங்க நிர்ணயிக்கல. நாங்க கிளியரா சொல்லிட்டோம்.

2026யை நோக்கி பயணிப்பதுதான் நல்லது.  பாராளுமன்ற தேர்தல் எப்படி இருக்குன்னு தெரியல. எல்லாம் பணநாயகம் உள்ளது. பண அரசியல் தான் இங்க. இப்ப கூட ஒரு சகோதரர் கிட்ட பேசிட்டு வந்தேன். என் பக்கத்துல தான் உக்காந்து இருந்தாரு.  வேற ஒரு இயக்கத்தின் சகோதரர். எம்பி தேர்தலில் நிக்க 100 கோடி வேணும்னு சொல்றாரு. சட்டமன்றம் 25 கோடி வேணும்னு சொல்றாரு. இது ஜனநாயகமா ? என்ற கேள்வி என் மனசுல எழுந்து கொண்டு இருக்கின்றது என தெரிவித்தார்.