2024 டி20 உலகக் கோப்பைக்கு உகாண்டா தகுதி பெற்றது.

வின்ட்ஹோக்கில் கென்யாவுக்கு எதிராக நேற்று அபார வெற்றிக்குப் பிறகு முதன்முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பையின் முதன்மைச் சுற்றுக்கு தகுதி பெற்ற உகாண்டா கிரிக்கெட் அணி வியாழன் அன்று வரலாற்றை பதிவு செய்தது.2024 ஆம் ஆண்டு T20I உலகக் கோப்பையில் விளையாடும் உகாண்டா, அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும். முன்னதாக நமீபியா அணி உலக கோப்பைக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது கடைசி அணியாக உகாண்டா தகுதி பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய உகாண்டா அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் சைமன் செசாசியின் 60 ரன்கள் மற்றும் தினேஷ் நக்ரானி  23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய கென்யா 129 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு மெகா நிகழ்வில் முக்கிய கட்டத்தை எட்டிய இறுதி அணியாக மாறியது உகாண்டா. மறுபுறம், நமீபியா மற்றும் உகாண்டாவின் கைகளில் தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே டி20 உலக கோப்பைக்கு தகுதிபெற தவறியது.

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் ஆப்பிரிக்காவில் இருந்து 3 அணிகள் :

2024 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் மூன்று ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்கும். ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் உகாண்டா அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இடம்பெறும் ஐந்தாவது ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை உகாண்டா பெறும்.

2024 டி20 உலகக் கோப்பைக்கு இதுவரை தகுதி பெற்ற 20 அணிகள்:

மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா.

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 4 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.