2023 உலகக் கோப்பையை இந்தியா வெல்லத் தவறியபோது ரோஹித்தும், விராட் கோலியும் மிகவும் வேதனையில் இருந்ததாக அஷ்வின் கூறினார்.

அகமதாபாத்தில் நவம்பர் 19 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதித் தோல்வியை இந்தியாவின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் ஆர் அஷ்வின் சமீபத்தில் நினைவு கூர்ந்தார். இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர்  கண்ணீர் சிந்துவதைப் பார்த்தபோது தனது இதயம் உடைந்ததாக அவர் கூறினார். சொந்த மண்ணில் உலக கோப்பை முழுவதும் இந்தியா ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றது, ஆனால் இறுதியில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். இந்நிலையில் அஸ்வின் உலக கோப்பையை நினைவு கூர்ந்தார், மேலும் ஹிட்மேனின் தலைமையைப் பாராட்டுவதற்கு முன்பு ரோஹித் மற்றும் கோஹ்லி இடையேயான ஹெமிஸ்ட்ரி பற்றி விரிவாகப் பேசினார். 

 யூடியூப் சேனலில் எஸ் பத்ரிநாத்திடம் பேசிய அஷ்வின், “ஆமாம், நாங்கள் வலியை உணர்ந்தோம். ரோஹித்தும் விராட்டும் அழுது கொண்டிருந்தனர். அதைக் கண்டு பரிதாபமாக இருந்தது. எப்படியிருந்தாலும், அவ்வாறு இருக்கக்கூடாது. இந்த அணி ஒரு அனுபவம் வாய்ந்த அணி. என்ன செய்வது என்பது அனைவருக்கும் தெரியும். பின்னர் அது தொழில்முறை. அவர்களின் நடைமுறைகள், வார்ம் அப்கள் அனைவருக்கும் தெரியும். இரண்டு இயல்பான தலைவர்கள் இந்த இரண்டையும் செய்ய அணிக்கு இடம் அளித்து ஒரு அதிர்வை உருவாக்கினர் என்று நான் நினைக்கிறேன்.”

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை பாராட்டிய அஸ்வின், அணியில் ரோஹித் கொண்டிருந்த தலைமைத்துவத்தை விளக்கினார். அணியில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் தெரிந்துகொள்ள ரோஹித் தனிப்பட்ட முறையில் நேரம் எடுத்துக்கொண்டார், இது அவரது தலைமைத்துவத்தில் சிறப்பான திறமை என்று அஸ்வின் கூறினார்.

ரோஹித்தின் கேப்டன்ஷிப்பை அஷ்வின் பாராட்டினார்,  மேலும் கருத்து தெரிவிக்கையில், “நீங்கள் இந்திய கிரிக்கெட்டைப் பார்த்தால், எம்.எஸ். தோனியை சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்று எல்லோரும் சொல்வார்கள். ரோஹித் சர்மா ஒரு சிறந்த நபர். அவர் அணியில் உள்ள ஒவ்வொரு நபரையும் புரிந்துகொள்கிறார், நாம் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் மற்றும் பிடிக்காதது என்பது அவருக்குத் தெரியும். அவருக்கு சிறந்த புரிதல் உள்ளது. ஒவ்வொரு வீரரையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துகொள்ள அவர் முயற்சி செய்கிறார்.”

தொடர்ந்து அவர், “அவர் நிறைய முயற்சி செய்கிறார். தூக்கத்தை துறந்து கூட்டங்களில் ஒரு பகுதியாக மாறுகிறார், அவர் முதலில் முயற்சி செய்கிறார். ஒவ்வொரு நபருக்கும் எப்படி தந்திரோபாயங்களை விளக்குவது என்பதைப் புரிந்துகொள்வதில் அவர் முயற்சி செய்கிறார். இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு மேம்பட்ட தலைமைத்துவம்” என்றார்.

மேலும் அஸ்வின் ஐசிசி போட்டியில் இந்தியா விளையாடிய கிரிக்கெட்டின் பிராண்டை மாற்றியதற்காக ஷர்மாவை பாராட்டினார். ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட விரும்புவதாகச் சொல்வது எளிது, ஆனால் ரோஹித் ஷர்மாதான் அதற்கான வழியைக் காட்டினார் என்று அஷ்வின் கூறினார். இந்திய கேப்டன் உண்மையில் அனைத்து இந்திய போட்டிகளிலும் தொனியை அமைத்தார் என்றும், இந்திய அணியிலிருந்து தோல்வி பயத்தை போக்க முடிந்தது என்றும் கூறினார்.

அஸ்வின் கூறியதாவது, பேச்சில் சொல்வது, எல்லோரையும் ஒரு பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடச் சொல்வது ஒரு விஷயம், ஆனால் அதைச் செய்வதும் அதை மைதானத்தில் காண்பிப்பதும் வேறு விஷயம். ரோஹித்தை எனக்கு ரொம்ப நாளாக தெரியும். ஒயிட் பால் கிரிக்கெட்லயும் பாத்துருக்கேன். டெஸ்ட்லயும் பாத்துருக்கேன்.

ரோகித் நினைத்திருந்தால் 40 – 50 ரன்களை 120, 140 ரன்களாக மாற்றியிருக்கலாம். ஈசியா அடித்திருக்கலாம், கஷ்டமே கிடையாது. இந்த சீசனின் ரன்களை குவித்து இருப்பார். இன்பேக்ட் நான் வீட்டுக்கு வந்த உடனே 2-3 பேர் கேட்டாங்க.. ரோஹித் 40க்கு அவுட்டாயிட்டான், அவன் அடிச்சிருந்தா பைனல்ல ஜெயிச்சு இருக்கலாம் அப்டின்னு சொன்னாங்க. அதெல்லாம் நான் ஒத்துக்கவே மாட்டேன். 10 ஓவரில் அவர் ஆகும்போது 80 ரன்கள் இருந்தது. அங்கிருந்து அப்படியே ஆடினால் 300 ரன்கள் எடுத்திருக்கலாம். அவர் செய்த வேலை டாப்ல செட் பண்ணாரு. இப்படித்தான் மச்சி விளையாட போறோம். அப்படின்னு ஒரு கான்பிடன்ஸ கொடுத்துட்டாரு. பரவால்ல நாம் 150 ரன்னில் அவுட் ஆனாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் டோன் செட் செய்வோம், அடித்து ஆடுவோம், பயத்தை உண்டாக்குங்கள் என்றார். அணியில் உள்ள 11 பேரும் உலகக் கோப்பையை சிறப்பாக விளையாடியதாக நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

ரோகித் இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் பாசிட்டிவாக அதிரடியாக தொடங்கியதால் அதன்பிறகு வந்த வீரர்கள் இன்னிங்க்ஸை நன்றாக எடுத்துச்சென்றனர். ஆனால் இறுதிப்போட்டியில் அதனை இந்தியாவால் செய்ய முடியாதது தோல்விக்கு காரணமாக பார்க்கப்டுகிறது. இறுதிப்போட்டியில் ரோகித் மேக்ஸ்வெல் ஓவரில் அவுட் ஆகும்போது, ஏற்கனவே அந்த ஓவரில் அவர் பவுண்டரி, சிக்ஸர் உடன் 10 ரன்கள் அடித்திருந்தபோது அந்த ஷாட் தேவையா என விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் ரோகித் இந்த உலகக் கோப்பை முழுவதுமே அந்த வழக்கமான அதிரடி பாணியை வெளிப்படுத்தினார். அவர் 47 ரன்களை அதிரடியாக குவித்து அவுட் ஆன போதிலும் அதன் பின் வந்த வீரர்கள் இன்னிங்சை சிறப்பாக எடுத்துச் சென்று இருந்தால் 280 ரன்களில் இருந்து 300 ரன்கள் குவித்திருக்கலாம்.  அதன்பின் கோலி –  கே.எல் ராகுல் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், ராகுலின் மெதுவான ஆட்டமும்  விமர்சனத்தை ஏற்படுத்தியது. கம்பீர இதை ஏற்கனவே கூறியிருந்தார்.

தோல்விக்கு பின் அப்போது இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியதாவது :

தோல்விக்கு பின் அப்போது கம்பீர் கூறியது, “இது இரட்டை முனைகள் கொண்ட வாள். ஆனால் தைரியமான அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். பார்ட்னர்ஷிப்பை உருவாக்க உங்களுக்கு நேரம் தேவை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் 11 முதல் 40 ஓவர்கள் என்பது மிக மிக நீண்ட நேரம். யாராவது அந்த ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்,” என்று ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் கம்பீர் கூறினார்.

“இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிருந்தாலும், அவர்களின் முதல் 6-7 பேட்டர்களுடன் இந்தியா மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதை நான் உண்மையில் விரும்பியிருப்பேன். நான் நன்றாக இருந்திருப்பேன். ஆனால், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உங்களால் 240 ரன்களைக் காக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால்… நீங்கள் போராடும் இடம் அதுவல்ல. இது இந்த வழி அல்லது அது. ஒன்று நாம் 150 ஆல் அவுட் அல்லது 300. அதுதான் இந்தியாவிடம் இல்லாதது. அங்குதான் இந்தியா ஐசிசி போட்டிகளில் வெற்றிபெறவில்லை. நான் அவுட் ஆனாலும் நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்று ரோஹித் ஆட்டத்திற்கு முன்பே சொல்லி அனுப்பியிருக்க வேண்டும்

அதிரடியாக ஆடி அவுட் ஆனாலும் பரவாயில்லை. இன்னிங்சை கோலி எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஆனால் மற்ற வீரர்கள் ஆக்ரோசமாக அடித்து ஆடி இருக்க வேண்டும். கே.எல் ராகுல் இதனை செய்திருக்க வேண்டும். அது என்ன நடந்திருக்கும்? நாங்கள் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருப்போம். ஆனால் தைரியமாக இருந்திருந்தால் எங்களால் 310 ரன்கள் எடுத்திருக்க முடியும். இந்தியா சாம்பியன் ஆகி இருக்கும். இது 1990 அல்ல.. 240 என்பது நல்ல ஸ்கோர் அல்ல. 300க்கு மேல் ரன்கள் வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது