உலகம் முழுவதும் உள்ள மக்களால் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் தினம் ஆங்கில புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது. இந்த புத்தாண்டு எப்படி வந்தது என்று கேட்டால் நம்மில் பலருக்கும் பதில் இல்லை. வருடத்தின் புதிய தினத்தை வரவேற்கும் நாம் அந்த தினம் எப்படி தோன்றியது? என்பதன் வரலாற்று பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ஜனவரி முதல் தேதியே புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங்களாகத்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் மெசபட்டானியர்கள் மார்ச் 25ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாக கருதினார்கள். அவர்கள் காலங்களில் ஆண்டுக்கு 10 மாதங்களை மார்ச் 25ஆம் தேதி தான் இயேசுவின் தாய் மரியா கர்ப்பமுற்றதால் இந்த நாளை ஆண்டின் முதல் நாளாக கொண்டாடி வந்தார்கள். ஆனால் ரோமானியர்கள் சூரியனின் நகர்வினை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 1ம் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரோமானிய மன்னர்கள் ஒருவரான நுமா என்பவர் 10 மாதங்களாக இருந்த ஆண்டினை 12 மாதங்கள் என மாற்றினார். முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என பெயர் வைத்தார். ரோமானியர்களின் கடவுள் ஆன ஜனஸ் நினைவாக தான் ஜனவரி என்ற பெயர் வந்ததும், அந்த முறையில் ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் என்பவர் ஜனவரி 1ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் ஜூலியன் காலண்டர் முறை எனவும் அழைக்கப்பட்டது.

பிறகு கிபி 1582 ஆம் ஆண்டு போப் 13 ஆம் கிரகோரி ஜூலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டு என்று கூறி அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள் என்றும், 365 நாட்களையும் 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதை அடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது. அதன்படி நாம் எல்லோரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த புத்தாண்டு வந்துவிட்டது. மக்கள் அனைவரும் சந்தோஷமான நிலைக்கு வந்து விட்டனர். நாம் இந்த நூற்றாண்டின் 22 ஆண்டுகளை கடந்து விட்டோம். இனி வருகின்ற காலங்களில் செல்வம் பெருகி வறுமை நீங்கி சோகம் மறைந்து வளமைப் பிறக்க, அறிவும், துணிவும் பெற்றிடவும், நல்லது பெருகி உலகம் செழித்திட நடு இரவில் உதித்தெழுந்த புத்தாண்டை வரவேற்போம்.