இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா சமீபத்தில் தைரியமாக கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஆகிய இரு நாடுகளும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இரு தரப்பு தொடர்களில் மோதுவது கிடையாது. ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த சூழலில் தற்போது இரு அணிகள் குறித்து புதிய விவாதம் ஓன்று நடந்து வருகிறது. பிரச்சினை என்னவென்றால் ஒருநாள் உலகக் கோப்பை 2023 மற்றும் ஆசிய கோப்பை என 2 போட்டிகள் நடத்துவதில் இருக்கிறது. இந்த போட்டிகள் பற்றிய விவாதம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்போது இந்த விவாதம் புதிய திருப்பத்தை எடுக்கும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம்  இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதே நேரத்தில், இந்தியா எங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலகக் கோப்பைக்காக நாங்கள் இந்தியாவுக்குச் செல்ல மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறுகிறது.

இருப்பினும், அதிகாரப்பூர்வமாக இந்த விஷயம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.உலகக் கோப்பை குறித்து டேனிஷ் கனேரியா தனது யூடியூப் சேனலில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் 50 ஓவர் உலகக் கோப்பைக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யாது. இது இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உறுதி செய்யப்படும். துபாயிலோ அல்லது கத்தாரிலோ ஆசிய கோப்பையை நடத்த பாகிஸ்தான் தயாராகிவிட்டால், அது அது நல்ல விஷயமாக இருக்கும் என்று தெரிவித்தார்..

ஆசிய கோப்பை போட்டி நடைபெறும் இடம் தொடர்பாக ஏற்கனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் முழுமையான முடிவை எடுக்க முடியவில்லை.இந்த முடிவை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) மார்ச் மாதம் வரை ஒத்திவைத்தது. இருப்பினும், ஆசிய கோப்பை நடைபெறும் இடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயர் முதலிடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு மார்ச் மாதம் எடுக்கப்படும்.

பிசிசிஐ பாகிஸ்தான் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறது, ஆனால் இந்தியா பாகிஸ்தானில் விளையாடுவதை பிசிசிஐ விரும்பவில்லை” என்று பிசிபி தலைவர் நஜாம் சேத்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

2023 ஆசிய கோப்பை பற்றிய நிச்சயமற்ற நிலை அக்டோபரில் தொடங்கியது, ACC தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளருமான ஜெய் ஷா, அரசியல் பதட்டங்கள் காரணமாக இந்தியா அண்டை நாட்டிற்கு செல்ல முடியாததால், பாகிஸ்தானில் போட்டிகள் நடத்தப்படாது என்று கூறினார்.