ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 510 கோடி ரூபாய் என சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்தது. இந்தியாவில் பணக்கார முதல்வராகவும் ஜகன்மோகன் ரெட்டி இருக்கிறார். இந்நிலையில் முதல்வர் ஜகன்மோக ரெட்டி மீது தற்போது தெலுங்கு தேசம் கட்சியினர் பரபரப்பு தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 2004-ம் ஆண்டு வேட்பு மனுவில் 1.74 கோடி சொத்து மதிப்பு என ஜகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலின் போது 77.39 கோடி எனவும், 2011 இடைத்தேர்தலில் 445 கோடி எனவும் வேட்பு மனுவில் சொத்து மதிப்பினை காட்டியுள்ளார். தற்போது இந்தியாவின் பணக்கார முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி எனவும் 2019-ம் ஆண்டுபடி அவரின் சொத்து மதிப்பு 510 கோடி எனவும் தெரியவந்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 5,499. அவர் அணியும் செருப்பின் விலை ரூ. 1,34,800. மேலும் இப்படி ஜெட் வேகத்தில் சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தங்க சுரங்கம் வைத்து நடத்துகிறாரா என்று தெலுங்கு தேசம் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.