இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை கொண்டு வந்தது. முதலில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது பொதுமக்கள் மத்தியில் பெரிதளவில் புழக்கம் இல்லை. இதன் காரணமாக தற்போது மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவதில் பிரதமர் மோடிக்கு உடன்பாடு இல்லை என அவரின் முன்னாள் முதன்மை செயலாளர் நிர்பேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்களுக்கு வழி வகுக்கும் என்பது மோடிக்கு நன்றாக தெரியும். இதனால் குறுகிய காலத்திற்குள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதால்தான் அரை மனதாகவே இந்த நடைமுறைக்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.