பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் சாதனையை முறியடிக்கக்கூடிய வல்லமை இந்த 3 இந்திய வீரர்களிடம் உள்ளது..

வேகப்பந்துவீச்சை பற்றி பேசும்போது கண்டிப்பாக இவரது பெயர் இருக்கும். அவர்தான் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். ராவல் பிண்டி  எக்ஸ்பிரஸ் சென்று இவரை ரசிகர்கள் அழைப்பார்கள். அதற்கு காரணம் அவரது வேகம் தான். அக்தர்  2003 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 161.3 வேகத்தில் பந்து வீசி வரலாறு சாதனை படைத்துள்ளார்.. இதுவரை இந்த சாதனையை  பல பந்துவீச்சாளர்கள் நெருங்கி இருக்கின்றனர்.. ஆனாலும் இவரது  சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.. இந்த சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல, ஆனால் இவரது சாதனையை முறியடிக்கக் கூடிய வல்லமை இந்த மூன்று இந்திய வீரர்களுக்கு இருக்கிறது.

1. உம்ரான் மாலிக் :

ஜம்மு எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உம்ரான் மாலிக், கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அவர் தனது வேகப்பந்து வீச்சால் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளார். ஐபிஎல் 15வது சீசனில் அனைத்து போட்டிகளிலும் அதிவேகமாக பந்துவீசி வளர்ந்து வரும் வீரர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து 8 ஒருநாள் போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8 டி20 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 157 கி.மீட்டர் வேகத்தில் வீசியிருக்கிறார்.. இவரால் 160 வேகத்தில் பந்துவீச முடியும்.

2. கமலேஷ் நாகர்கோடி :

ராஜஸ்தானை சேர்ந்த 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி, 2018 ஆம் ஆண்டு U-19 ஒருநாள் உலகக் கோப்பையில், நாகர்கோடியின் வேகப்பந்து வீச்சு இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. இதையடுத்து கொல்கத்தா அணிக்கு 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. அவர் 3 முதல் தர போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கமலேஷ் நாகர்கோடி முதல்தர போட்டிகளில் 155+ வேகத்திற்கு மேல் பந்து வீசியுள்ளார். எனினும் காயம் காரணமாக அவர் தொடர்ந்து விளையாடவில்லை. அவர் முழுமையாக குணமடைந்து தொடர்ந்து விளையாடினால், அக்தரின் சாதனையை முறியடிக்க முடியும்.

3. வாசிம் பஷீர் :

உம்ரான் மாலிக்கின் சகோதரர் வாசிம் பஷீர் 150க்கு மேல் பந்துவீசக்கூடியவர். ஜம்மு காஷ்மீர் அணிக்காக வேகமாக பந்துவீசி வருகிறார். அவரது பந்துவீச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. விரைவில் இந்திய அணியில் வாசிம் பஷீர் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.