இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியைப் புகழ்ந்து தள்ளினார்..

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியின் ஐந்தாவது நாள் மழையால் கைவிடப்பட்டது. அதனால் இந்த போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், தொடர் முடிந்ததும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியைப் புகழ்ந்து தள்ளினார்.

டிரினிடாட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் விராட் சக்தி வாய்ந்த சதம் அடித்தார். அவர் 11 பவுண்டரிகள் உதவியுடன் 121 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் பலத்தில் இந்திய அணி 438 ரன்களை எட்டியது. விராட் கோலி பற்றி பேசிய ரோஹித் சர்மா, கடினமான சூழ்நிலைகளில் அணியின் இன்னிங்ஸை காப்பாற்ற விராட் கோலி போன்ற வீரர்கள் தேவை என்று கூறினார். அணியில் முதல் இன்னிங்ஸில் விரைவாக 4 பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன பிறகு, பொறுப்பேற்று பேட்டிங் செய்தார்” அந்த சூழ்நிலையில் அவர் ஒரு அற்புதமான சதம் அடித்தார் என்று பாராட்டினார்..

ரோஹித் சர்மாவின் சதம் :

இந்தத் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவும் வலுவான ஃபார்மில் காணப்படுகிறார். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 103 ரன்கள் குவித்தார். இது அவரது 10வது டெஸ்ட் சதம். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இணைந்து அணிக்கு இரு போட்டிகளிலும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

அறிமுக போட்டியில் ஜெய்ஸ்வால் கலக்கல் :

இந்த தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அறிமுக போட்டியில் 16 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 171 ரன்கள் குவித்தார். பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் வலுவான அரை சதம் அடித்தார். அவர் 74 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 57 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் அதிகபட்சமாக 266 ரன்கள் எடுத்தார்.