ஐபிஎல்லில் அதிகமுறை டக் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்..

தினேஷ் கார்த்திக் கடந்த சில நாட்களாக மோசமான பார்மில் இருந்து வருகிறார். அவரது பேட்டில் ரன்களை எடுப்பது கடினமாக உள்ளது. இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக  இன்று அவர், ஒரு ரன் எடுக்க முடியாமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம், அவர் தனது பெயரில் ஒரு தர்மசங்கடமான சாதனையை பதிவு செய்தார். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த மோசமான சாதனையை தினேஷ் கார்த்திக் செய்துள்ளார் :

IPL 2023 இல் தினேஷ் கார்த்திக் இதுவரையில் சிறப்பாக ஆடவில்லை. அவர் மும்பை அணிக்கு எதிராக டக் அவுட் ஆனார். லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிராக 1* ரன், KKR க்கு எதிராக 9 மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக பூஜ்ஜியம் அடித்துள்ளார். இதனால் அவர ஐபிஎல்லில் 15 முறை பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்து மோசமான சாதனையில் முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல்லில் அதிக எண்ணிக்கையிலான பூஜ்ஜிய டிஸ்மிஸ்கள்:

தினேஷ் கார்த்திக் – 15 முறை

மந்தீப் சிங் – 15 முறை

பியூஷ் சாவ்லா – 14 முறை

ரோஹித் சர்மா – 14 முறை

சுனில் நரைன் – 14 முறை

ஹர்பஜன் சிங் – 13 முறை

மணீஷ் பாண்டே – 13 முறை

தினேஷ் கார்த்திக்கின் கேரியர் இப்படித்தான் இருந்தது : 

தினேஷ் கார்த்திக் 2008 முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.இதுவரை 233 ஐபிஎல் போட்டிகளில் 132.43 சராசரியுடன் 4386 ரன்கள் எடுத்துள்ளார். அதே சமயம் அவரது சிறந்த ஸ்கோர் 97 ரன்கள். தற்போது இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட்டிலும்  தினேஷ் கார்த்திக் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்இன்று மாலை நடந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.