மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் தற்போது தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது.