செப்.14 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகள் வங்கி கணக்கில் ச1000 வரவு வைக்கப்பட்டது. முதல் முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதால், அதில் பல குழப்பங்கள் உள்ளன. சிலர் பணம் வந்ததாக SMS வந்தும், பணத்தை எடுக்க ATM கார்டு வரவில்லை என கூறுகின்றனர். இதுபோல் ATM கார்டு வராதவர்களுக்கு விரைவில் வங்கியில் இருந்து ATM கார்டு வரும், அதனை ஆக்டிவேட் செய்ய உங்கள் வங்கியை அணுகவும்.

மேலும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, அதற்கான காரணம் குறித்து இன்று முதல் SMS அனுப்பப்படுகிறது. SMS வந்த உடன் இ-சேவை மையம் மூலம் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்தால், தீர்வு காணப்படும். மேலும், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வட்ட அளவில் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1000 பெற தகுதியுடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையத்தை அணுகி மீண்டும் விண்ணப்பிக்கலாம்.