இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு நிதியாண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஊழியர்களுக்கு 214 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் வருகைப்பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தேசிய மொபைல் கண்காணிப்பு முறை மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது.

இந்த செயலி மூலமாக மாநில, மாவட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து,வருகை பதிவு தேதி மற்றும் பணியாளர்களுக்கான பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் தினம் தோறும் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் இந்த செயலியில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டாயமாக டிஜிட்டல் முறையில் வருகை பதிவு மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.