நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்திலிருந்த சரிவு நீக்கப்பட்டது. அதோடு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த திட்டம் உதவியது. எனினும் தற்போது இத்திட்டத்துக்கு ஆபத்து வந்து உள்ளது. அதன்படி, இனிமேல் இந்த திட்டத்தில் பணியற்றுவோருக்கு ஊதியமானது ஆதார் பேமெண்ட் வாயிலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு செய்தால் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தான் சம்பளம் போடப்படும். எனினும் கிராமங்களில் இத்திட்டத்தில் வேலை செய்பவர்களில் அனைவருக்கும் இந்த வங்கி கணக்கு இல்லை. இதன் காரணமாக கணிசமான எண்ணிக்கையில் ஆனவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. அதுமட்டுமின்றி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவும் குறைந்துவிட்டது. இவையனைத்தும் இப்போது ஒருசேர வருவதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கு சிக்கல் உருவாகி இருக்கிறது.