காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர் கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிக்கு 10 காங்கிரஸுக்கு 10 தொகுதியில் மட்டும் ஒதுக்கப்பட்டன நாடாளுமன்ற தேர்தலில் 10 முதல் 15 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று வரியில் வைத்துள்ளனர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் கமிட்டியின்  மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி  தலைமையில் நடைபெற்றது. குறிப்பாக அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை  எதிர்கொள்வது பற்றியும்,  வாக்குச்சாவடி முகவர்களை உறுதி செய்வது,  கொடி கம்பம் அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

குறிப்பாக கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 முதல் 15 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெற வேண்டும் என்றும்,  குறிப்பாக வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும், திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளுக்கு மேல் கேட்டு பெற வேண்டும் எனவும் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளடக்கி மொத்தம் 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது மாவட்ட  தலைவர் கூட்டத்தில் கூடுதலாக கூடுதலாக 5 தொகுதிகள் உட்பட்டு மொத்தம் 15 தொகுதிகள் ஒது க்கப்பட வேண்டும் என  பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.