தமிழகம் முழுவதும் 10, +1, +2 மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மீறினால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதனால், மாலை 5.30 மணி வரை பள்ளிகள் இயங்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மாலை நேர வகுப்புகள் கட்டாயம் கிடையாது, தேவைப்படும் பள்ளிகளில் வைத்துக்கொள்ளலாம் என்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி மாலை நேர வகுப்புகளை வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.