தென் லண்டனில் வசித்து வரும் 10 வயதான அதிதி திரிபாதி என்ற சிறுமி இதுவரை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கும் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு தனது பெற்றோருடன் சுற்றுலா சென்று உள்ளார். தீபக் மற்றும் அவிலாசா தம்பதியின் மகளான இந்த சிறுமி உலக நாடுகளுக்கு பயன்பட வேண்டும் என்பதே அவரின் பெற்றோரின் விருப்பம். கணக்காளராக பணியாற்றும் இருவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் என்பதால் பாடசாலையில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் பாடசாலை விடுமுறை நாட்களில் மட்டும் பயணங்களை திட்டமிட்டுள்ளனர்.

வருடத்திற்கு பயணத்திற்காக மட்டுமே 20,000 பவுண்டுகளை செலவிடுகின்றனர். இந்த பயணம் மூலமாக தங்களின் மகள் வெவ்வேறு கலாச்சாரங்கள், உணவுகள் மற்றும் மக்களை புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். அவரின் மகளுக்கு மூன்று வயது இருக்கும் போதே பயணங்களை தொடங்கிய நிலையில் இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற பல்வேறு கலாச்சாரங்களை பார்த்த தங்களின் மகள் ஆர்வமும் உற்சாகமும் அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பத்து வயதாகும் அந்த சிறுமி சுமார் 50 நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்