இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.

2018 முதல் 2019 ஆம் கல்வியாண்டில் 28.4 சதவீதமாக இருந்தது, 2020-21 கல்வியாண்டில் 20 புள்ளி 6 சதவீதமாக குறைந்துள்ளது.. அதிலும் குறிப்பாக ஒடிசா 49.9% மற்றும் பீகார் 42.1% மிக மோசமான நிலையில் உள்ளன. 10 சதவீதத்திற்கும் குறைவான மாநிலங்கள் வரிசையில் தமிழகம் ஒன்பது சதவீதம் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.