தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதற்கான ஹால் டிக்கெட் நாளை பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ்  1 பயிலும் மாணவர்களுக்கு கடந்த வருடம் முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூபாய் 1500 விதம் இரண்டு வருடங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அந்தவகையில் நடப்பாண்டு அக்-15 ஆம் தேதி திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் பட்டியல் ஹால் டிக்கெட் ஆகியவை தேர்வு இணையதளத்தில் நாளை பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு மாணவர்களுக்கு அனுமதி சீட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.