ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும்போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியுள்ளார். ஆலையில் பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று கூறிய அவர்,  சார் ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு இதனை கண்காணிக்கும்; ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 நபர்கள் இக்குழுவில் இருப்பார்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பணிகள் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து நடைபெறும் கழிவுகள் வெளியேற்றும் பணிகளுக்காக ஆலையில் தொழிலாளர்கள் செல்லும் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டு அந்த கேட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

இந்த கழிவுகள் அகற்றும் பணியின் போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் வாரம் ஒருமுறை ஆலையில் எவ்வளவு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது தொடர்பான அறிக்கையினை ஆய்வுக்குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.