ஷாருக்கானுடன் கவுதம் கம்பீர் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் தனது ஆட்டத்தால் மட்டுமல்ல, கருத்துக்களாலும்  செய்திகளில் இடம்பிடிப்பவர். கம்பீர் சமீபத்தில் பாலிவுட் மன்னன் ஷாருக்கானை சந்தித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஷாருக்கானுடன் அவர் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கம்பீர் தனது ட்விட்டரில், ஷாருக்கானுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தோடு, அவர் பாலிவுட்டின் ராஜா மட்டுமல்ல, இதயங்களின் ராஜா. நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அளவற்ற அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன். உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வெறுமனே சிறந்தது எஸ்ஆர்கே என பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணா சுவாரஸ்யமாக கமெண்டில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உண்மையான அரசர்கள் தங்கள் துறைகளில்! இது வீடு திரும்புவதற்கான அறிகுறியாக இருக்க முடியுமா? சும்மா ஆச்சரியமாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். அதற்கு கொல்கத்தா ரசிகர்களும் திரும்பி வீட்டுக்கு வாருங்கள் என உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு காலத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீர், தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் கம்பீரின் பெயர் நிச்சயமாக உள்ளது. முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கொல்கத்தாவுக்கு 2 கோப்பைகளைபெற்று கொடுத்துள்ளார். 2012 மற்றும் 2014 இல், அவரது தலைமையில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது.

2018ல் கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கவுதி, அதன் பிறகு வர்ணனையாளராக அவதாரம் எடுத்தார். கம்பீருக்குப் பிறகு இயான் மோர்கன், பாட் கம்மின்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் கேப்டன்களாக மாறியுள்ளனர். ஆனால், கேகேஆர் அணியின் ஆட்டம் மாறவில்லை. 16வது சீசனில் நிதிஷ் ராணா தலைமையில் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்ற கம்பீர், லக்னோ அணியின் வழிகாட்டியாக இருந்தார்.கடந்த  16வது சீசனில், ஆர்சிபி வீரர் விராட் கோலியுடன் கம்பீர் களத்தில் சண்டையிட்டார். அப்போதிருந்து, கோலியின் ரசிகர்கள் இந்த முன்னாள் தொடக்க வீரரை குறிவைத்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் கோலி… கோலி என்று கத்தி வருவது குறிப்பிடத்தக்கது.