இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மது பிரியர்கள் பலரும் உள்ளூர் மதுபானங்களை விட வெளிநாட்டு மதுபானங்களை தான் அதிக அளவு விரும்புகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் மதுபானங்களின் மவுசு குறைய ஆரம்பிக்கிறது. இதனை சரி செய்ய உத்திரபிரதேச மாநிலத்தில் வெளிநாட்டு மதுபான விற்பனையை குறைப்பதற்கு புதிய யுத்தியை கையாண்டு உள்ளனர்.

அதாவது வெளிநாட்டு ரகங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்கு இறக்குமதி செய்யும்போது நிறுவனம் கட்டாயம் முதன்மை இறக்குமதியாளரிடம் இருந்து அதிகார கடிதத்தை பெற்றிருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு மதுபானங்களின் விளையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.